அதிகாரி காலுக்கடியில் ஊர்ந்து போன பாம்பு..அலறியடித்து ஓடிய மற்ற அதிகாரிகள்

x

அதிகாரி காலுக்கடியில் ஊர்ந்து போன பாம்பு.. அலறியடித்து ஓடிய மற்ற அதிகாரிகள் - ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு புகுந்த நிலையில், அங்கிருந்த அதிகாரிகள் அச்சத்தில் பதறி ஓடினர். ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைதளத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகாரி ஒருவர் காலுக்கு கீழே ஊர்ந்து சென்ற பாம்பை கண்டு கூச்சலிட்ட நிலையில், அச்சமடைந்த மற்ற அதிகாரிகள் பதறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் தேடியும் பாம்பு கிடைக்காததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்