ரேஷன் பொருட்கள் கடத்தல்..உடந்தையாக இருந்த அதிகாரி..லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், உணவு கடத்தல் பிரிவு அதிகாரியிடமிருந்து கணக்கில் வராத நான்கு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுகர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் முறைகேடாக கடத்தப்பட்டு, தனியார் அரிசி ஆலைகளில் பதுக்கி வைக்கப்படுவதாகவும், இதற்கு குடிமை பொருள் தடுப்பு பிரிவு பாதுகாப்பு அதிகாரி முருக செல்வம் உடந்தையாக இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அழகாபுரி எனும் இடத்தில் முருக செல்வத்தின் வாகனத்தை சோதனையிட்ட போது, கணக்கில் வராத நான்கு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து முருக செல்வத்திடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com