40 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்தல்... ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

x

திண்டிவனத்தில், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை, காரில் கடத்திச் செல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம் சந்தைமேடு பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 40 மூட்டைகளில் குட்கா பொருட்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக, கிஷோர், சிக்னாராம், கைலாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்