வங்கியிலிருந்து போன் கால் வருதா? உஷார் - “SMS Link- அ தொட்ட நீ கெட்ட“

x
  • மும்பையில் தனியார் வங்கி வாடிக்கையாளார்களுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்றை அனுப்பிய ஆன்-லைன் மோசடியார்கள்,
  • உங்களது KYC/ PAN தகவல்களை தெரிவிக்கவில்லை என்றால் கணக்க முடக்கிவிடுவோம் என எச்சரித்துள்ளனர்.
  • மோசடியாளர்கள் அனுப்பிய இணையதள லிங்கை உண்மையென நம்பிய வாடிக்கையாளர்கள், அதனை கிளிக் செய்து சுய விபரங்களை பதிவிட்டிருக்கிறார்கள்.
  • அப்போது அவர்களை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தன்னை வங்கி மேலாளர் பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டு, OTP-யை பதிவு செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.
  • அப்படியே செய்த வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்த பணம் எல்லாம் மாயமாகியிருக்கிறது.
  • இவ்வாறு 40 வாடிக்கையாளர்களிடம் லட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டுள்ளது.
  • இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் போலீசில் புகாரளித்துள்ளார்கள்.
  • அதுகுறித்து விசாரித்து வரும் மும்பை போலீசார், இதுபோன்ற மோசடி எஸ்.எம்.எஸ். லிங்கை கிளிக் செய்து ஏமாறாதீர்கள் என எச்சரித்திருக்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்