தார் தொழிற்சாலையில் இருந்து வந்த புகை...திடீரென மயங்கிய 10 பேர் - திருச்சியில் பரபரப்பு

x

திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியில் தனியார் தார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய புகையால் அருகில் வசிக்கும் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட பத்து பேர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்