இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..அசரவைக்கும் ஸ்மார்ட் கண்ணாடி - இனி கேட்க தேவையில்லை பார்த்தால் போதும்

x

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடிகள், காது கேளாதவர்கள் - உரையாடல்களை கண்களால் காண வழிவகை செய்துள்ளது... ஒரு உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, வசனத்தின் வரிகளை இந்த கண்ணாடிகள் வாயிலாகக் காண முடியும்... அந்த உரையாடல்களை மீண்டும் ஒளிபரப்பச் செய்து படித்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டியில் இயங்கும் இந்த ஸ்மார்ட் கண்ணாடியானது XRAI Glass என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆக்மென்டட் ரியாலிட்டி கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு உள்ள செல்போன் செயலியுடன் இணைக்கப்பட்டு அதன் பயனாளர்களுக்கு ஒரு உதவியாளரைப் போல் செயல்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்