சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை - பக்தர்களுக்கு வார்னிங்

x

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் அதிகளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அங்கு, மழை ஓய்ந்து நல்ல வெயில் அடிக்கும் நிலையில் சின்னம்மை பரவி வருகிறது. இந்நிலையில், ஐந்து போலீசாருக்கு சின்னம்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கியிருந்த 12 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு அவர்களும் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும், நோய் மேலும் பரவாமல் இருக்க அனைத்து போலீசாரும் கட்டாயம் மாஸ்க் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்களும் மாஸ்க் அணிய அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்