தமிழகத்திற்கு கடத்தப்பட்ட கஸ்கஸ் தேவாங்கு | loris | chennaiairport

x

தமிழகத்திற்கு கடத்தப்பட்ட கஸ்கஸ் தேவாங்கு

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட கஸ்கஸ் தேவாங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்த சுங்க இலாக்க அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், 5 அரியவகை கஸ்கஸ் தேவாங்கு குட்டிகள் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும், பயணியிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், தேவாங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்