"திருச்சி கலெக்டர அடி.. கையெழுத்து போடுறேன்" - வன்மத்தால் சிக்கிய மின் துறை அதிகாரி

x

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி மின்நிலையத்தில் பணியாற்றி வருபவர் இளநிலை பொறியாளர் ஸ்ரீதர். இவரிடம் புதிய சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள், தங்கள் பகுதியிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கேட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்களை, ஸ்ரீதர் தொடர்ந்து அலைக்கழித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று மீண்டும் வந்த மக்களிடம் மின்சாரம் வழங்குவதற்கான நடைமுறை ஆன்லைனில் உள்ளதென கூறிய அவர், மாவட்ட ஆட்சியரின் சட்டையை பிடித்து, அவரின் கன்னத்தில் அறைந்து கையெழுத்து வாங்கி வந்தால்.. மின் இணைப்பு தருகிறேன்... என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது....

தான் கூறியதுபோல் செய்து கையெழுத்து வாங்கி வந்தால் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன் என கூறிய ஸ்ரீதர், என்னிடம் கேட்கும் இதே கேள்வியை கலெக்டரிடமும் கேட்க வேண்டுமெனவும், அதிகாரமும், வருமான துறையும் அவனிடம்தான் உள்ளதென கலெக்டரை ஒருமையிலும் பேசியிருக்கிறார்...இதைதொடர்ந்து, மின் இணைப்புகளை கையெழுத்திட்டு விற்பனை செய்வதே எனது பணியென்றும், அதற்காகவே தன்னை கல்லக்குடியில் பணியமர்த்திருக்கிறார்கள் என அதிகார தோரணையில் பேசிய ஸ்ரீதரிடம், ஊர்மக்கள் கையெழுத்து ஒன்று கேட்டிருக்கின்றனர்...அதற்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தால் கையெழுத்திடுகிறேன் என இளநிலை பொறியாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது...இந்த விவகாரம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 2 மாதத்திற்கு முன்பு, லஞ்சம் வாங்கிய புகாரில் ஸ்ரீதர் சிக்கியதும், இது குறித்தான விசாரணை அவரிடம் நடந்து வருவதும் தெரியவந்தது...இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் சட்டையை பிடித்து, அவரின் கன்னத்தில் அறைந்து கையெழுத்து வாங்கி வா.. மின் இணைப்பு தருகிறேன்... என ஒருமையில் தரக்குறைவாக பேசிய மின்வாரிய இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து, மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் உத்தரவிட்டிருக்கிறார்....


Next Story

மேலும் செய்திகள்