"அரசு மருத்துவர்களின் அழிச்சாட்டியங்கள்.. ஆதாரப்பூர்வமாய் வெளியான வீடியோக்கள்" - சிவகங்கை நபர் குற்றச்சாட்டு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சென்று பணி புரிவதாக, புகார் எழுந்துள்ளது. பயோ மெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்துவிட்டு, சொந்த சுகாதார மையத்துக்கு செல்வதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், மனசாட்சிக்கு உட்பட்டு சேவையாற்ற வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும், இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com