கிணற்றுக்குள் கிடந்த மண்டை ஓடு - வனத்துறையினர் ஆய்வில் வெளியான உண்மை

x

குடிநீர் தேவைக்காக நெலாக்கோட்டை பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கிணற்றிற்குள் சாக்கு மூட்டை ஒன்று இருக்க அதை வெளியே எடுத்து பார்த்துள்ளனர். இதில், மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் இருந்ததால், அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர், எலும்புகளை மீட்டு ஆய்வு செய்ததில், வனவிலங்கின் தலை மற்றும் எலும்புகள் என்பது தெரியவந்தது. பெரிய வகை குரங்கின் எலும்பு கூடாக இருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், கிணற்றில் வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்