ஆபாச வீடியோ வெளியிட்ட ரவுடிக்கு ஸ்கெட்ச்...பழிக்கு பழிவாங்க வீடு புகுந்து வெட்டிக்கொலை...

ஆபாச வீடியோ வெளியிட்ட ரவுடிக்கு ஸ்கெட்ச்...பழிக்கு பழிவாங்க வீடு புகுந்து வெட்டிக்கொலை...
Published on

திண்டுக்கல் - மாலப்பட்டி

ரவுடி கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதால் ஆத்திரம்...

வீடு புகுந்து பெயிண்டர் வெட்டி கொலை...

ஆபாச வீடியோ வெளியிட்ட ரவுடிக்கு ஸ்கெட்ச்...

பழிக்கு பழிவாங்க வீடு புகுந்து வெட்டிக்கொலை...

ஆபாச வீடியோ வெளியிட்டு ரவுடிய பழிவாங்குன ஒரு திமுக பிரமுகர கட்டம் கட்டி போட்டு தள்ளி இருக்கு எதிர்தரப்பு கும்பல். இந்த மாஸ்டர் ப்ளானுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தவர்கிட்ட இருந்து தொடங்கியிருக்கு இந்த பழிவாங்கும் படலம்

தாய்மார்களின் ஒப்பாரி ஓலம்... அம்புலென்ஸின் சைரன் சத்தம்... ரத்தவாடை... போலீஸ் படை.... இப்படித்தான் மாலப்பட்டியின் மாலைபொழுதை அன்று சூரியன் கடந்து சென்றது.

ஊரே கூடி நின்று வேடிக்கை பார்க்கும் இந்த வீட்டினுள் தான் முகம் சிதைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது ஒரு ஆணின் சடலம்.

கொல்லப்பட்டது இதே கிராமத்தை சேர்ந்த முனீஷ்வரன். 29 வயதாகும் இவருக்கு திருமணம் ஆகி ஷர்மிலா என்ற மனைவியும் 4 மாத கைக்குழந்தையும் உள்ளனர். பெயின்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று வீட்டில் உறங்கி கொண்டிருந்த முனீஷ்வரனை, இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து வெட்டி கொலை செய்திருக்கிறது.

சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொல்லப்பட்டது யார் கொலைக்கான காரணம் என்ன என்று அறிந்து கொள்ள விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்

கொல்லப்பட்ட முனீஷ்வரன் ஒன்றும் சாதாரன ஆள் இல்லை... ஊருக்குள் பெயிண்டராக வலம் வரும் இவர், வெளியுலகம் அறியாத ஒரு பக்கா ரவுடி.4 கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் முனீஷ்வரனின் மீது நிலுவையில் உள்ளன.

ஒரு வேளை கொலைக்கான காரணம் முன்பகையாக இருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரனை நடத்திய போது தான் போலீசாரின் பிடியில் நான்கு பேர் சிக்கி இருக்கிறார்கள்.

அவர்களிடம் நடந்த கிடுக்கிப்பிடி விசாரனையில் 4 நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலைக்கு பழிக்கு பழியாக முனீஷ்வரன் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

ஆம்....கடந்த 4 நாட்களுக்கு முன் திண்டுக்கல் அண்ணா நகரில் வைத்து பட்டறை சரவணன் என்பவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

30 வயதாகும் சரவணன் ஒரு பிரபல ரவுடி...தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே இரும்பு பட்டறை வைத்திருந்ததால் அதுவே இவரது அடைமொழியாக மாறி போனது. திமுக பிரமுகரான பட்டறை சரவணனுக்கு ஆட்கடத்தல், கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து தான் பிரதான தொழில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சரவணனின் நண்பன் இப்ராம்ஷாவை, திண்டுக்கல்லில் பிரபல ரவுடியாக வலம் வரும் அல் ஆசிக் என்ற ஆசிக் முகமது வெட்டி கொலை செய்தார். அன்று முதல் சரவணனுக்கும் அல் ஆசிக்கிற்கும் பகை உருவானது.

பார்க்குமிடங்களில் எல்லாம் பகைத்து நின்று சண்டை போட்டுள்ளனர். அல் ஆசிக்கை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய சரவணனுக்கு ஆயுதமாக கிடைத்தது அல் ஆசிக்கின் ஓரினச்சேர்க்கை வீடியோ.

அந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியிட்டு, அல் ஆசிக்கை மானபங்க படுத்தியுள்ளார். இதனால் கொதித்து போன அல் ஆசிக், சரவணனை கட்டம் கட்டி கொலை செய்திருக்கிறார்.

அந்த வழக்கில் அல் ஆசிக் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அந்த அல் ஆசிக்கின் உயிர் நண்பன் தான் தற்போது கொல்லப்பட்ட முனீஷ்வரன். சரவணனின் கொலைக்கு மாஸ்டர் மைன்டும் இவர் தான் என்று சொல்லப்படுகிறது.

சரவணனை கொல்ல அல் ஆசிக்கிற்கு பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார். கொலை நடந்ததும் ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குள் பொட்டிப்பாம்பாய் அடங்கிய முனீஷ்வரனை, பழிக்குப்பழியாக சரவணனின் தரப்பினர் வெட்டி கொன்றிருப்பது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர் விசாரனை நடத்தி வருகின்றனர். முழு விசாரனைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

X

Thanthi TV
www.thanthitv.com