வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி...டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம்

x

இளையான்குடி அருகே கண்மாய்க்கரைரோட்டில் வசித்து வரும் காளியம்மாள் என்ற மூதாட்டி, வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இதனை அறிந்த கொள்ளையர்கள் இருவர், டவுசர் மற்றும் தலையில் ஹெல்மேட் அணிந்தபடி, அந்த வீட்டில் நுழைந்துள்ளனர்.

அப்போது, மூதாட்டியை தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து அந்தப் பகுதியில் நடக்கும் 3வது திருட்டு சம்பவம் என்பதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்