கார் மேல் அமர்ந்து மாஸ் காட்ட நினைத்து தமாஷான இளைஞர்கள் - போலீசார் செய்த சிறப்பான சம்பவம்

x

குஜராத்தில் காரின் மேல் அமர்ந்து ஊர்வலம் வந்த இளைஞர்களை மடக்கிய போலீசார், அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர். அகமதாபாத்தின் சிந்து பவன் சாலையில் காரில் சென்ற இளைஞர்கள் பொதுமக்களுக்கு வழிவிடாமல் ரகளை செய்தனர். இந்த நிலையில், இளைஞர்களை மடக்கி பிடித்த போலீசார், அதே சாலையில் தோப்புக்கரணம் போட வைத்து மன்னிப்பு கேட்க வைத்தனர். மேலும், இளைஞர்களின் அட்டகாசத்துக்கு வழங்கிய நூதன தண்டனையை, அதிபாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குஜராத் போலீசார் பகிர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்