நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம்... திடீரென மயக்கமான அதிமுக கவுன்சிலர்... சீர்காழி நகராட்சியில் பரபரப்பு

x

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தின் போது, அதிமுக கவுன்சிலர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சீர்காழி பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில்லை உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாமக, தேமுதிக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்த நிலையில், 4ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமாமணி, திடீரென மயக்கம் அடைந்தார். உடனடியாக, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்