சமையல் செய்து சாப்பிட்டு போராடும் சகோதரிகள்..! கோதரர்களுக்கு எதிராக புது டைப் தர்ணா... அப்படி என்ன தான் பிரச்சனை..?

x

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தந்தையின் சொத்தில் மகள்களுக்கு பங்கு தராமல் போலியாக விற்பனை செய்ததை கண்டித்து பெண்கள், சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னு என்பவருக்கு, 18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 30 சென்ட் நிலத்தை, அவரது மகன்கள் வெங்கட்ராமன், சாமிநாதன் ஆகியோர், மகள்களான சுகுணா, சுமதி, கவிதா, சுதா ஆகியோருக்கு தெரியாமல் போலியாக பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சகோதரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் மத்தூர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று மனு அளித்துள்ளனர். மனுவின் மீது அதிகாரிகள் எவ்வித விசாரணை, நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், விவசாய நிலத்தின் முன்பு கொட்டகை அமைத்து குடும்பத்தாருடன் சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே சுமார் 15 நாட்களுக்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்