காணாமல்போன அண்ணனை பல ஆண்டுகளாக தேடித் தவித்த தங்கை - ஒரு போட்டோவால் நிகழ்ந்த அதிசயம்

x

பல ஆண்டுகளாக காணாமல்போன மனநலம் பாதித்த அண்ணனை, சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படம் மூலம் தங்கை மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் காரைக்காலில் அரங்கேறியுள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்தவர் ஷர்மிளா பானு. இவரது அண்ணன் சதாம் உசேன் மனநலம் பாதிக்கப்பட்டவர். தங்கை மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்த சதாம் உசேன், திடீரென மாயமானார். அவரை ஷர்மிளா பானு, பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், சதாம் உசேன், காரைக்கால் கடற்கரையில் சுற்றித்திரிந்து, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, அதில் மிச்சமுள்ள உணவு உண்டு காலத்தை கழித்து வந்துள்ளார். அவருக்கு, உதவும் கரங்கள் நடத்தி வரும் மோகன் என்ற தன்னார்வலர் தினமும் உணவு அளித்து வந்துள்ளார். மேலும், சதாம் உசேனின் புகைப்படத்தை சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ஷர்மிளா பானு, உடனடியாக தொடர்பு கொண்டு, தனது அண்ணன் என்பதை உறுதி செய்தார். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஷர்மிளா பானு மற்றும் அவரது கணவரை வரவழைத்து, சதாம் உசேனை துணை ஆட்சியர் பாஸ்கர் ஒப்படைத்தார். அண்ணனை கண்ட தங்கை ஆனந்தக் கண்ணீருடன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்