"ஐயா என் பொண்ண காணோம்.." - தலைமை செயலகம் முன்பு கதறிய பெற்றோர் - சென்னையில் பரபரப்பு | thanthi tv

x

காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தலைமை செயலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - ஹெலன் தம்பதி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிபிரிவில் மனு ஒன்றை அளித்தனர். அதில், பெத்தேல்புரத்தை சேர்ந்த ஜீவிமோன் என்பவர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாகவும், மகளை மீட்டு தரக் கோரி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் தற்போது வரை மகள் மீட்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், மகளை கடத்தியவர் மீது10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள போதும், காவல்துறை உரிய விசாரணையை மேற்கொள்ளவில்லை எனக் கூறி தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் தடுத்து தலைமை செயலகம் வெளியே அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்