தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியை எச்சரித்த பாடகி - சின்மயி

x

துணைக்கு யாரும் இல்லாமல் கவிஞர் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என பாடகி சின்மயி, தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நடிகை அர்ச்சனாவை எச்சரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் அர்ச்சனா. இவர் சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். அந்தப் பதிவில், பாடகி சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து கமென்ட் பதிவிட்டுள்ளார். இது தற்போது பேசு பொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்