"ஒத்த செருப்புக்கு பிறகு ஒத்த ஷாட் படம்" - பார்த்திபனை புகழ்ந்த முதல்வர்

x

இரவின் நிழல் படத்தை பார்த்து ரசித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன் எனவும், ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம் எனவும், நான்லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என பார்த்திபன் காட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்