"ஆவலுடன் காத்திருக்கிறேன்" - STR பகிர்ந்த தகவல்

x

சிலம்பரசனின் பத்து தல படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் ஒபெலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள சிலம்பரசன், ரசிகர்களுக்கு ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாக மகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்