இணையத்தை மிரட்டும் சிம்புவின் கெட்அப்..ஒவ்வொரு படத்திலும் ஒரு புது லுக் - அடுத்த என்ட்ரிக்கு ரெடி ஆகும் STR

இணையத்தை மிரட்டும் சிம்புவின் கெட்அப்..ஒவ்வொரு படத்திலும் ஒரு புது லுக் - அடுத்த என்ட்ரிக்கு ரெடி ஆகும் STR
Published on

முதல் படத்திலிருந்தே, ஹேர்ஸ்டைல், கையில் அணியும் கயிறு, கழுத்தில் அணியும் டாலர்-னு தன்னுடைய தோற்றத்தில் பல புதிய விஷயங்களை செய்து கவனம் ஈர்த்த சிம்பு, திடிரேன நாளுக்கு நாள் எடை கூடி, அதில் செஞ்சுரியும் அடித்தார். அதன் பிறகு, ரசிகர்களின் ஆசைக்காக மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தார் நடிகர் சிம்பு .

அதற்கு பிறகு வெளியான ஈஸ்வரன் படத்தில் எடை குறைந்து, பழைய ஃபிட்டான தோற்றத்துக்கு மாறியிருந்தார்.

இதை தொடர்ந்து மாநாடு படத்தில் இஸ்லாமிய இளைஞன் என்ற கேரக்டருக்கு ஏற்றார்போல் தாடி மீசையில் வித்தியாசம் காட்டியிருந்தார்.

கௌதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில், கிராமத்து இளைஞன் கேரக்டரில் க்ளீன் ஷேவ் லுக், மேலும் கொஞ்சம் எடை குறைப்பு என மாறியிருந்தார்.

தற்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் பத்து தல படத்துக்காக மீண்டும் கொஞ்சம் எடையை கூட்டி, அடர்ந்த நீளமான தாடியுடன் இருந்தார் சிம்பு. கிட்டதட்ட இதே கெட்டப்பில் வெந்து தணிந்தது காடு கிளைமேக்ஸிலும் இருந்தார்.

அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ள STR 48 படத்திற்காக கெட்டப்பை மாற்றியுள்ளார் சிம்பு. Stubble look என சொல்லப்படும் லேசான தாடி மீசை மற்றும் குடுமி போடும் அளவுக்கு நீளமான தலைமுடியுடன் வலம் வரும் சிம்பு, இந்த கெட்டப்பில் ஃபோட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

நல்ல ரோலில் நடிக்க காட்டு பசியில் இருக்கும் சிம்பு, மீண்டும் இளசுகளின் ஸ்டைல் ஐகானாக மாறி வருவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com