டைம்ஸ் சதுக்கத்தில் ஒலித்த சித்து மூஸ்வாலாவின் பாடல் ஏராளமான ரசிகர்கள் திரண்டு அஞ்சலி

பஞ்சாபைச் சேர்ந்த மறைந்த பிரபல பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒலித்தது. கடந்த மே29ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால், சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டார். அவரது படுகொலை இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரின் 29 வது பிறந்தநாளை முன்னிட்டு அமெரிக்காவிலுள்ள, டைம்ஸ் சதுக்கத்தின் பெரிய திரைகளில் சித்து மூஸ்வாலாவின் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, அங்கு திரண்ட ஏராளமான சித்துவின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

X