சியாச்சின் ராணுவப்படை அதிகாரியான.. முதல் பெண் 'கேப்டன் ஷிவா சவுகான்' - ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை 'பிரதமர் மோடி'

x

இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பகுதியில் உள்ள ராணுவ பிரிவின் அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குமார் போஸ்ட்டில் நடந்த 3 மாத கடும் பயிற்சிக்கு பிறகு ஷிவா சவுகானை சியாச்சின் ராணுவ உயர் அதிகாரியாக நியமித்துள்ளதாக ராணுவம் அறிவித்துள்ளது.

மேலும், ஷிவா சவுகான் சப்பர்ஸ் குழுவை வழிநடுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆபத்து நிறைந்த சியாச்சின் பனிமலையில் ராணுவ அதிகாரியான முதல் பெண் என்ற பெருமையை ஷிவா சவுகான் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கேப்டன் ஷிவா சவுகானை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்வதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்