"பீர் எங்கே... என் அன்பே..."- குமுறும் மதுப்பிரியர்கள்.. மதுபானக் கடைகளில் பீர் தட்டுப்பாடா..?

x

அரசு மதுபானக் கடைகளில் பாட்டில் பீர் வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மதுப்பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்... தற்போது கோடைக்காலம் என்பதால் சேலத்தில் பீர் விற்பனையானது மற்ற மதுபான வகைகளைக் காட்டிலும் சூடு பிடித்துள்ளது. ஆனால் பீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாட்டில் பீர் வகைகள் குறைந்து... டின் பீர் வகைகளே அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், மதுப்பிரியர்கள் குமுறுகின்றனர். முழு பாட்டில் பீர் ஒன்று 160 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில், அரை லிட்டர் டின் பீர் 140 ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்