சாவை தேடி தந்த "ஷார்ட் பிலிம்" மோகம்... உயிரை விட்ட 2 கல்லூரி நண்பர்கள் - இயக்குநர் கனவு தகர்ந்தது

x

டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவர் 20 வயதான மோனு. இவர் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து கொண்டே டெல்லி பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வியில் இளங்கலை படித்து வந்துள்ளார்.

இவரும் இவரின் நெருங்கிய நண்பரான கல்லூரி மாணவர் வன்ஸ் சர்மா (Vansh Sharma) என்பவரும், அவ்வப்போது கூட்டாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில், சம்பவத்தன்று டெல்லி ரயில் நிலையத்தின் தண்டாவளத்தில் ரயில் வரும் போது ரீல்ஸ் எடுக்க இருவரும் திட்டமிட்டனர்.

அப்போது ரீல்ஸ் வீடியோவில் வரும் லைக்கிற்காக ரயிலின் குறுக்கே ஓடினர்.

அப்போது வந்த வேகத்தில் ரயில் இருவர் மீதும் மோதியது. இதில் அவர்கள் 2 பேருமே சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் காண்போரின் பதறச் செய்தது.

உடனே, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்ட சென்ற நிலையில், சம்பவம் நடைபெற்ற தண்டவாளத்தில் தீவிர விசாரணையில் இறங்கினர்.

அப்போது, தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களின் செல்போனையும் கைப்பற்றிய போலீசார், தீவிர ஆய்வு நடத்தினர்.

அதில், உயிரிழந்த மாணவர் வன்ஸ் ஷர்மா, இன்ஸ்டாகிராமில் இரண்டு கணக்குகள் வைத்திருந்ததும், தன்னுடைய சுயவிவரக் குறிப்பில் தன்னை வீடீயோ கிரியேட்டர் எனவும், அரசியலில் தீவிர ஈடுபாடு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அந்த இரு கணக்குகளில் உயிரிழந்த இரு மாணவர்களும் கூட்டாக சேர்ந்து பல வீடியோக்களையும், இன்ஸ்டா ரீல்ஸ்களையும் பதிவு செய்திருக்கின்றனர்.

இதே போல், மோனுவின் இன்ஸ்டா கணக்கிலும் தன்னை வீடியோ க்ரியேட்டராகவும், புகைப்பட கலைஞராகவும் குறிப்பிட்டுள்ள நிலையில், இருவரும் ரயில் தண்டவாளங்களில் ரீல்ஸ்கள் எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளனர்.

இதனிடையே, இருவரும் செல்போனில் குறும்படம் ஒன்று எடுக்கும் முயற்சியில் இறங்கியதாகவும், அதில் ரயில் வரும் போது இருவரும் தண்டவாளத்தில் குதித்து கடக்க முயற்சிக்கும் காட்சியை நேரலையில் எடுக்க விரும்பியதாகவும் போலீசாரின் விசாரணையில் கூறப்படுகிறது.

சமீபத்தில் டெல்லி ரயில் நிலையத்தில் ரயில் வரும் செல்பி எடுக்க முயன்றபோது 18 வயது முதல் 20 வரை உள்ள மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்