காலணிகளைத் திருடி பல்லாவரம் சந்தையில் விற்பனை... வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது - 300 ஜோடி காலணிகள் பறிமுதல்

x

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் காலணிகள் திருடப்பட்டதால், சிசிடிவி காட்சிகளை குடியிருப்புவாசிகள் ஆய்வு செய்தனர்.

அதில், இளைஞர் ஒருவர், படிக்கட்டுகளில் தவழ்ந்து வந்து காலணிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சேலையூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

தொடர் விசாரணைக்குப் பிறகு, கேம்ப் ரோடு பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த விகாஸ் குமார், ரோஹித் குமார், அருள் எப்ரின் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, திருடிய காலணிகளை அவர்கள் பல்லாவரம் வாரச் சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 300 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வடமாநில இளைஞர், காலணியைத் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்