மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்... தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் - உடல்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை

மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்... தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் - உடல்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை
Published on

உத்தரபிரதேசத்தில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவர், தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் முஸப்பர்நகரை சேர்ந்தவர் நசீம். 25 வயதான இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பாக தமன்னா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமணத்தை நசீமின் உறவினரான சதாம் என்பவர் முன்னின்று நடத்திய நிலையில், திருமணமான முதலிலே நசீமிற்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவியை அழைத்துக்கொண்டு சதாமின் வீட்டிற்கு சென்ற நசீம், அவருடைய வீட்டின் முன்பு தகராறு செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சதாமின் பக்கத்து வீட்டுக்காரரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து நசீம் தப்பியதாக கூறப்படுகிறது.

மனைவியுடன் தப்பிசென்று கொண்டிருந்த நசீம் திடீரென இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மனைவியுடன் கடும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அவர், தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com