சென்னையில் அதிர்ச்சி சம்பவம் - காவலர் செய்த விபரீத செயல் - போலீஸிடம் சிக்கிய கடிதம்

x

சென்னையில், குடும்பப் பிரச்சினை காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, காவலர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர், குதிரைப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். சென்னை அயனாவரம் வசந்தம் கார்டன் பகுதியில் நண்பர் புஷ்பராஜுடன் வாடகை வீட்டில் அருண்குமார் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் புஷ்பராஜ் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, அருண்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் வந்த போலீசார், உயிரிழந்த அருண்குமாரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, தற்கொலைக்கு முன் அருண்குமார் எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், திருநெல்வேலி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வரும் பிரியா என்ற பெண்ணை காதலித்த அருண்குமார், கடந்த மார்ச் மாதம் அவரை திருமணம் செய்துள்ளார். அருண்குமாரின் பெற்றோரை கவனிக்கக்கூடாது என அவரது மனைவி அடிக்கடி சண்டையிட்டு வந்த நிலையில், மீண்டும் செல்போனில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அருண்குமார், தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்