"கெடுத்திட்டீயே.. உயிரை விட போறீயா".. கண் அழகி கண்ணில் ஈரம்.. மதுரையை சேர்ந்த "கரகாட்ட பரமேஸ்வரிக்கு" நேர்ந்த கதி

x
  • பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில், நம் அனைவருக்கும் பரிச்சயமானது கரகாட்டம்.
  • பெரும்பாலும் கோயில் திருவிழாக்களில், சுவாமி ஊர்வலத்தின் போது, தலையில் கரகத்தை வைத்துக் கொண்டு லாவகமாக பெண்களும், ஆண்களும் ஆடுவதை அனைவரும் ரசிப்பார்கள்.
  • இப்படி தனது கரகாட்டத்தால் பலரையும் கவர்ந்தவர் தான் மதுரை திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த பரமேஸ்வரி.
  • 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்ட நிலையில், தாயாருடன் வசித்து வரும் இவர், பட்டாம்பூச்சி என்ற பெயரில் தனியாக யூ டியூப் சேனலை தொடங்கி, அதில் தனது நடனங்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
  • இதுதவிர பரமேஸ்வரியின் ரசிகர்கள் தனியாக, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பல கணக்குகளைத் தொடங்கி, வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
  • பரமேஸ்வரிக்கு ரசிகர்கள் அதிகரித்து வரும் அதேவேளையில் அவருக்கு எதிரான குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
  • பரமேஸ்வரி, கரகாட்டக் கலையை இழிவுபடுத்துகிறார், வழக்கத்துக்கு மாறாக ஜாதிக் கொடியை அணிந்து ஆடுகிறார், மூத்த கலைஞர்களை மதிப்பதில்லை, அவரால் பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகிறோம் என்று குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள் அகில இந்திய கலைக் குடும்பம் சங்கத்தைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞர்கள்.
  • கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் முடங்கியிருந்த நிலையில், மீண்டும் கால்களில் சலங்கை கட்டித் தயாராக இருக்க வேண்டிய நேரத்தில், மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

Next Story

மேலும் செய்திகள்