தலைக்கேறிய போதையால் நடுரோட்டில் இளைஞர்கள் வெறிச்செயல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

ஒட்டன்சத்திரம் பகுதியில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், ஒருவரை ஒருவர் சிமெண்ட் கல்லால் தாக்கி கொள்ளும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முனியப்பன் மற்றும் சபரிநாத் ஆகிய 2 இளைஞர்கள், மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கையில் சிமெண்ட் கல்லை வைத்திருந்த சபரிநாத், முனியப்பனை கல்லால் தாக்கியுள்ளார். அப்போது கீழே விழுந்த கல்லை எடுத்த முனியப்பன், சபரிநாத்தின் முகத்தில் பலமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்நிலையில் 2 பேரும் ஒருவரை ஒருவர் சிமெண்ட் கல்லால் தாக்கி கொள்ளும் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்