பிரபல ஷாம்பூக்களால் கேன்சர் பாதிப்பு..?..இத்தனை ஷாம்பூக்களில் பேராபத்தா? - ஆய்வில் ஷாக் தகவல்கள்

x

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நூற்றாண்டு கால பழமையான, பன்னாட்டு நிறுவனமான யுனிலீவர் நிறுவனம், ஷாம்பூ, சோப்புகள், டூத் பேஸ்ட்கள்,

டீ, காபி, உள்ளிட்ட பலவேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன் பொருட்கள் 190 உலக நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

யுனிலீவரின் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கிளைகள், குறிப்பிட சில பவுடர் ரக ஷாம்பூகளை திரும்ப பெற்றுள்ளன. டவ், டிரெஸ்மே, நெக்சஸ், சுவேவ், ராக்கஹாலிக் ஆகிய பிராண்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களை ஏற்படுத்தும் திறன் கொண்ட பென்ஸீன் இவற்றில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ப்ரேயர் மூலம், தண்ணீர் இல்லா மல், தலை முடியில் பூசப்படும் முறையில். பவுடர் ரக ஷாம்பூ கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் திரும்பப் பெறப்பட்டுள்ள பவுடர் ஷாம்பூ களில், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் அளவிற்கு பென்ஸீன் இல்லை என்று ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இருந்தாலும், முன் எச்சரிக்கை அடிப்படையில் இவற்றை யுனிலீவர் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் பிராக்டார் அன்ட் கேம்பிள், பேயர், சி.வி.எஸ், ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் டியோடரன்ட்கள், பவுடர் ஷாம்பூகள், பாடி ஸ்பிரேகள் சமீப மாதங்களில் இதே காரணத்திற்காக திரும்பப் பெறப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.

யுனிலீவர் நிறுவனத்தின் இந்திய கிளையான ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், இந்தியாவில் பவுடர் ஷாம்பூகளை உற்பத்தி செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் திரவ வடிவ ஷாம்பூக்களில் பிரச்சனை எதிவுமில்லை என்று கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்