எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு ஷாக் - மேலும் 100 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆபத்து

x

நாடு முழுவதும் 40 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவக்கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், ஆசிரியர் பட்டியல், சி.சி.டி.வி. கேமரா, ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட விதிகளைப் பின்பற்ற தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது. விதிகளை பின்பற்றாத மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும், நாடு முழுவதும் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகம், ஆந்திரா, குஜராத், அசாம் மற்றும் புதுச்சேரியில், 100 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 654-ஆக உயர்ந்திருப்பதுடன், எம்.பி.பி.எஸ். இடங்கள் 94 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்