பார்ட்டிக்கு சென்ற நடிகை ஷாலு ஷம்முவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸில் பரபரப்பு புகார்

x

நடிகை ஷாலு ஷம்முவின் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் 2 மாதங்களுக்கு முன்பு 2 லட்சம் ரூபாயில் ஐபோன் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 9ம் தேதி இரவு, எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நண்பர்களுடன் ஷாலு ஷம்மு பார்ட்டிக்கு சென்றுள்ளார். பின்னர் பார்ட்டி முடிந்து நள்ளிரவு நேரத்தில், சூளைமேட்டில் உள்ள நண்பர் வீட்டில் அவர் தங்கியுள்ளார். அடுத்தநாள் காலை, தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தபோது, செல்போன் காணாமல் போயிருந்ததைக் கண்டு ஷாலு ஷம்மு அதிர்ச்சி அடைந்தார். நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால், இதுதொடர்பாக பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில், தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்