ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் 369 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்பட்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.

x

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் 369 அடி உயரத்தில் கட்டி முடிக்கப்பட்ட சிவன் சிலை இன்று திறக்கப்படுகிறது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் உள்ள நாததுவாராவில், 369 அடி உயரத்தில் சிவன் சிலை கட்டப்பட்டுள்ளது. விஸ்வஸ் ஸ்வரூபம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. முதலில் 251 அடியாக அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், இறுதியாக 369 அடி உயரத்தில் சிலை கட்டி முடிக்கப்பட்டது. இந்த சிலை இரவில் கூட தெளிவாக தெரியும் வகையில் சிறப்பு விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் சிலையில் லிஃப்ட், படிக்கட்டுகள், மண்டபங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானத்தின் போது 3000 டன் இரும்பு மற்றும் ஸ்டீல் , 2.5 லட்சம் கன டன் கான்கிரீட் மற்றும் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில், இந்த சிலை திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்