ஷிவம் சிங், ஆதித்யா கணேஷ் அதிரடி- 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது திண்டுக்கல்

x

டிஎன்பில் தொடரில் லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்தியது. டிஎன்பில் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திருப்பூர் அணி, 20 ஒவர்களின் முடிவில் 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய திண்டுக்கல் அணி, 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சிவம் சிங் மற்றும் ஆதித்யா கணேஷ் ஆகியோர், 3 விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். சிவம் சிங் 74 ரன்களும், ஆதித்யா கணேஷ் 59 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்