"என்னை அடித்து சித்திரவதை செய்கிறாள்" - சபரிமலை புகழ் ரெகானா பாத்திமா தாயார் கதறல்
கேரளாவைச் சேர்ந்த ரெகானா பாத்திமா, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் போராட்டம் நடத்தியவர்.
மேலும், மாட்டிறைச்சி குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இந்நிலையில், இவரது தாயார் பியாரி, ஆலப்புழா வடக்கு போலீசில் அளித்த புகாரில், தனது மகள் ரெகானா பாத்திமா, தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், உறவினர்கள் வீட்டில் வசித்து வருவதாகவும் கூறினார்.
மேலும், தனது உறவினர்களையும் ரெகானா பாத்திமா மிரட்டுவதாக புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ரெகானாவை அழைத்து எச்சரித்துள்ளனர்.
