மீண்டும் பவருக்கு வருகிறார் சரத் பவார்..

x

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பாவாரே நீடிக்க வேண்டும் என உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 2ம் தேதி சரத் பவார் அறிவித்தார். புதிய தலைவரை தேர்வு செய்ய பிரஃபுல் படேல், சுனில் தாட்கரே, கே.கே.சர்மா, பி.சி.சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால், திலீப் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபி, ஜிதேந்திர அவாத், ஹாசன் முஷ்ரிப், தனஞ்ஜெய் முண்டே, ஜெய்தேவ் கெய்க்வாட் ஆகிய 15 பேர் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆலோசனை நடத்தி கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கட்சித் தலைவர் பதவியில் சரத் பவார் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மும்பையில் உள்ள சரத் பவாரின் வீட்டின் முன்பு நேற்று குவிந்தனர். கட்சியின் உயர்நிலைக் குழு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வேன் என சரத் பவார் தெரிவித்தார். இந்நிலையில், சரத் பவாரே தலைவராக தொடர வேண்டும் என உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கூட்டம் நடைபெறும் இடத்தின் வெளியே ஏராளமான தொண்டர்கள் சரத் பாவரே தலைவராக நீடிக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்