"சாந்தன் மீண்டும் இலங்கை செல்ல விரும்புகிறார்" - நளினி

திருச்சி அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்கவில்லை என நளினி தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன், சாந்தன் உள்ளிட்ட 4 பேர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நளினி தனது கணவர் முருகனை அகதிகள் முகாமில் நேரில் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நளினி, விடுதலை செய்யப்பட்டவர்கள், விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com