கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுவிப்பு - உற்சாக வரவேற்பு தந்த நண்பர்கள்

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளை 6 மாத சிறை தண்டனை வழங்கிய நிலையில், கடந்த செப்டம்பரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 6 மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்த நிலையில், 4 வழக்குகளிலும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் இன்று கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, மதுரை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்