"திருமணமான முதல் நாளிலே சுயரூபம்.. ஆபாச படங்களில் வருவதை போல பாலியல் டார்ச்சர்" - நடிகை சம்யுக்தா

x

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சின்னத்திரை நடிகர்கள் அர்ணவ் - திவ்யா தம்பதி போலவே, மற்றுமொரு சின்னத்திரை தம்பதியின் குடும்ப சண்டை வீதிக்கு வந்துள்ளது. சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப, இவர்களின் திருமண வாழ்க்கையும் ஒரே மாதத்தில் கசந்தது. திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாட்டால் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் பிரிந்ததால், இவர்களின் விவகாரம் சின்னத்திரை வட்டாரத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரிவிற்கு என்னதான் காரணம் என சக நடிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், இருவரின் விவகாரமும், சமூக வலைதளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கசியத் தொடங்கியது

விஷ்ணுகாந்தை காதலிக்கும்போதே சம்யுக்தா சின்னத்திரை நடிகர் ரவி என்பவரையும் காதலித்து வந்ததாகவும், ரவி அத்துமீறியதால், விஷ்ணுகாந்தை திருமணம் செய்ததாகவும் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான ஆடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய சமயத்தில், இவர்களின் விவகாரம் வெளியாகிய நிலையில், இருவரின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவின ஒரு பக்கம் இன்ஸ்டாகிராமில் சம்யுக்தா மீது விஷ்ணுகாந்த் குற்றச்சாட்டு வைக்க, ஒரே அடியாக நடந்தது இதுதான் என காது கூசும் அளவிற்கு, விஷ்ணுகாந்த் மீது சம்யுக்தா குற்றச்சாட்டு வைத்தார். திருமணத்திற்கு முன் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரம் போலவே விஷ்ணுகாந்த் சாப்டாக இருப்பார் என நம்பி ஏமாந்துவிட்டதாக, சம்யுக்தா குமுறியுள்ளார்.

திருமணமான முதல் நாளிலேயே அவரது சுயரூபம் என்ன என்பது, தனக்கு அதிர்ச்சி அளித்ததாக கூறும் சம்யுக்தா, அவருடன் வாழ்ந்த நாட்களில் தன்னை ஒரு மனைவியாக கூட அவர் பாவிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளர். தன்னை ஒரு பாலியல் தொழிலாளி போலவே விஷ்ணுகாந்த் நடத்தியதாகவும், ஆபாச வீடியோக்களை பார்த்துவிட்டு, தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது வலியை கடைசி வரை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதை மனவலியுடன் சம்யுக்தா கூறியுள்ளார். ஆனால், இதற்கு பதிலளித்துள்ள விஷ்ணுகாந்த், ஒருவரை நம்பி திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள், அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து தன்னை காப்பாற்றிய இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். கணவன் மனைவிக்குள் நடந்த அந்தரங்க விசயங்கள் வீதிக்கு வருவதை தடுத்து, 2 பேரும் நிதானமாக பேசி, ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே, சக நடிகர்களின் எண்ணமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்