"நான் உன்ன பார்க்க முடியுமா ப்ளீஸ்.." - "நீ கேட்டனுதான் நான் செஞ்சன் ஆனா?" - மாணவருக்கு பாலியல் தொல்லை லீக் ஆனா ஆடியோ

x
  • கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர்.
  • இவரிடம் முனைவர் பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர், மதன்சங்கர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக பாரதியார் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்தார்.
  • இந்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐ.சி.சி கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
  • அதனைத் தொடர்ந்து, உயிர்வேதியல் துறை தலைவரான மதன்சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரும், கல்லூரி டீனும் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
  • இதில் மாணவரை, பேராசிரியர் மதன்சங்கர் சமரசபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.
  • மேலும், ஐ.சி.சி கமிட்டி விசாரணை நடத்திய பின்பும் கல்லூரி டீன் மதன்சங்கர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட முனைவர் பட்ட மாணவர் தெரிவித்த நிலையில், உரிய விசாரணைக்குப் பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்