"நிர்வாணமாக வீடியோ காலில் பேசினார்" கல்லூரி சேர்மன் மீது மாணவிகள் சரமாரியான குற்றச்சாட்டு

x

ஆபாசமாக நடந்து கொண்டதாக ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவிகள் வைத்த குற்றச்சாட்டின் பேரில் கல்லூரி சேர்மன் கைது செய்யப்பட்டார்.

அருப்புக்கோட்டையில் தனியார் ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் என்பவர் ஆபாசமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

மாணவிகளுக்கு வீடியோ கால் செய்து நிர்வாண கோலத்தில் நிற்பது, அருவெறுப்பான முறையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதேநேரம் மாணவிகளுக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்தன. இதனால் கொதித்து போன மாணவிகள், திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

கல்லூரியில் தங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும், கல்லூரி சேர்மன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவிகளிடம் கல்லூரி சேர்மனான தாஸ்வின் ஜான் கிரேஸ் அத்துமீறியது உறுதியான நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். 7 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்