"மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் புகார்" - குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் மேற்பார்வை குழு

x

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டுள்ளது.

WFI எனப்படும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உத்தரபிரதேச எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் பதவி வகித்து வருகிறார்.

இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக மேற்பார்வை குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் இந்த மேற்பார்வை குழு செயல்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த குழு, மல்யுத்த வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து, ஒரு மாதத்திற்குள், அறிக்கையை சமர்ப்பிக்கும் என, கூறியுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்