பெண்களிடம் பாலியல் அத்துமீறல்... சில்மிஷ சதுர்வேதி சாமியாருக்கு... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தவர் பிரசன்னா வெங்கடாச்சாரியார் என்ற சதுர்வேதி சாமியார். இவர் மீது கடந்த 2004-ம் ஆண்டு தொழில் அதிபர் மனைவி மற்றும் மகளை கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதுமட்டுமல்லாமல், காங்கேயத்தை சேர்ந்த தொழிலதிபர் திருஞானம் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய சதுர்வேதி சாமியார், அதனை திருப்பிக்கேட்டபோது, அடியாட்களுடன் சேர்ந்து அவரை தாக்கி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வரும் சதுர்வேதி சாமியார், தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்த நிலையில், வரும் 31ம் தேதி ஆஜராக சென்னை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com