"சடலத்துடன் உடலுறவு- குற்றமில்லை" - கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சடலத்துடன் உடலுற வு கொள்வது தண்டனைக்குரிய குற்றமில்லை என கர்நாடக நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த ரங்கராஜ் என்பவர், கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை கொலை செய்து, அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டார். இந்த வழக்கை விசாரித்த துமகூரு நீதிமன்றம், ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருந்தது. இதை எதிர்த்து ரங்கராஜ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. கொலை குற்றத்திற்கான ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்கான தண்டனையை ரத்து செய்தது. சட்டப்படி இறந்த உடலை மனிதராக கருத முடியாது என்றும், இயற்கைக்கு மாறான உடலுறவு, கற்பழிப்பு போன்ற சட்டப்பிரிவுகளுக்கு இந்த குற்றத்திற்கு பொறுந்தாது என்றும் தெரிவித்தது. இறந்த உடலுடன் உடலுறவு கொள்வதை குற்றம் என்பதை உறுதி செய்ய சட்டத்தில் திருத்தம் செய்யவோ அல்லது புதிய சட்டத்தையோ மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
