பெண்ணுடன் பாலியல் உறவு..? ஜன்னலில் தூக்கில் தொங்கிய மடாதிபதி - 2 பக்க கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்

x

கர்நாடகாவில் இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மடாதிபதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சக்கல் பாண்டே மடத்தில் மடாதிபதியாக இருந்த பசவலிங்கம், தனது அறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில், மடாதிபதி பொறுப்பை தட்டிப்பறிக்க முயன்ற சிலர் தன் மீது அவதூறு சுமத்துவதாக கூறி, அவர்களின் பெயரை கடிதத்தில் மடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

அதேநேரம், மடாதிபதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண், வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்