மழை நீருடன் கலந்த கழிவு நீர்.. காஞ்சிபுரத்தில் மக்கள் அதிர்ச்சி

x

காஞ்சிபுரத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து நிற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். 15வது வார்டுக்குட்பட்ட பல்லவர் மேடு பகுதியில் தாழ்வாக உள்ள அருந்ததியர் பாளையத்தில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து வீடுகளை சூழ்ந்து நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடுஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில்ஈடுபட முயன்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொது மக்கள் தங்கள் முடிவை கைவிட்டனர்


Next Story

மேலும் செய்திகள்