மழை நீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் "தவிக்கும் அயனாவர மக்கள் " chennai | ayanavaram

x

சென்னை அயனாவரத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து, துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை அயனாவரம் போலீஸ் மாணிக்கம் தெரு, பார்த்தசாரதி தெரு, உஜிநி தெரு, சி. கே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.. அதேபோல் வீடுகளில் மழை நீருடன், கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசி வருவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அதனால் தங்களது அவல நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்