"கருணாநிதியின் கனவு திட்டம் அது தான்"... "சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை" - தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

x

"கருணாநிதியின் கனவு திட்டம் அது தான்"... "சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை" - தமிழச்சி தங்கபாண்டியன் உறுதி

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை கோடம்பாக்கத்தில் சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், சேது சமுத்திர திட்டம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமாகும் என்றும், அத்திட்டத்தை செயல்படுத்த திமுக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்